ராதா மோகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன்

jdwmTJafhjisi‘அழகிய தீயே’, ‘பயணம்’, ‘மொழி’ ஆகிய படங்களை இயக்கிய ராதா மோகன், தற்போது இயக்கியிருக்கும் படம் ‘உப்பு கருவாடு’. இதில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் குறித்து ராதா மோகன் கூறும்போது, ‘உப்பு கருவாடு’ படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். கனவுகளை துரத்தும் இளைஞர்கள் பற்றிய கதை. இதை நகைச்சுவையாக உருவாக்கியிருக்கிறேன். காஞ்சி கருவாடு ஆகிட்டோம் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம்.

அதுபோல், கடலோரத்தில் தங்கியிருக்கும் இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையில் கஷ்டங்கள், சவால்களை கடந்து லட்சியத்தை அடைவதை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறோம். இதற்கு ‘உப்பு கருவாடு’ தலைப்பு பொருத்தமாக இருந்தது.

படத்தில் கதாநாயகனாக நடிக்க எளிமையான முகம் தேவைப்பட்டது. காமெடியும் இருக்கணும், அதே சமயத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும்.

அப்படிப்பட்ட நபரை தேடினேன். அதற்கு கருணாகரன் சரியாக பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தேன். இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய பெண்ணைத் தேடும்போது நந்திதாவை பொருத்தமாக இருந்தார்.

இப்படத்தில் ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரை எனக்கு கவுதம் மேனன்தான் அறிமுகம் செய்து வைத்தார். படத்தில் 2 பாடல்கள் இருக்கின்றன. இதில் ஒரு பாடலை கவுதம் மேனன் பாடியிருக்கிறார். இவர் பாடியது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

ஹீரோயினுக்கு வலுவான கதாபாத்திரங்கள் கொடுப்பது ஆரோக்கியமான விஷயம்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries