சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் தெறி – அவிழ்த்து விடப்பட்ட புளுகு மூட்டை

theriவிஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் தெறி என்று நேற்று அறிவித்தனர். அறிவித்த அடுத்த நிமிடமே பிரச்சனை வெடித்தது.

சதீஷ்குமார் என்ற இளம் இயக்குனர் தனது படத்துக்கு தெறி என்ற பெயரை மூன்று மாதங்களுக்கு முன்பே கவுன்சிலில் பதிவு செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் அது குறித்து விளம்பரமும் செய்திருந்தார்.

இந்நிலையில், நாங்கதான் முதல்ல தெறி பெயரை பதிவு செய்தோம் என்று விஜய் படத்தினர் தெறி பெயரை நேற்று விளம்பரப்படுத்தினர். ஆனால், சதீஷ்குமார் அதனை மறுத்துள்ளார். எப்படி?

செப்டம்பர் 11 -ஆம் தேதி சதீஷ்குமார் தெறி பெயரை பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே விஜய் படத்திற்கு தெறி பெயரை பதிவு செய்ததாக ரிஜிஸ்டர் புத்தகத்தில் பக்கத்தை மாற்றியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கேட்டிருந்தால் நானே படப்பெயரை தந்திருப்பேனே என்றும் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாஸ் நடிகர்களின் படம் என்றால் விதிமுறையை இஷ்டத்துக்கு வளைக்கும் சுயநலமிகளால் திரையுலகம் நிரம்பியுள்ளது என்பதற்கு தெறி இன்னொரு சான்று.

சதீஷ்குமாருக்கு முன்பே விஜய் படத்துக்கு தெறி என்ற பெயரை பதிவு செய்தார்கள் என்று சொல்லும் கவுன்சிலின் அதிமேதாவிகள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒரு பெயரை எப்படி மீண்டும் பதிவு செய்ய சதீஷ்குமாருக்கு அனுமதி தந்தார்கள்? இதிலேயே அவர்களின் புளுகு மூட்டை தெரிந்துவிட்டது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries