மகேஷ் பாபு இடத்தை பிடித்த சூர்யா

download1‘மாஸ்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘24’. இப்படத்தை ‘யாவரும் நலம்’ இயக்குனர் விக்ரம்குமார் இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியானது. இது மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று வருகிறது.

இப்படத்தின் இயக்குனர் விக்ரம்குமார் முதலில் இக்கதையை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிடம்தான் கூறினாராம். அவருக்கு படத்தின் கதை மிகவும் பிடித்திருந்ததாம்.

ஆனால் திரைக்கதையில் முதல் பாகம் மட்டுமே பிடித்திருந்ததாம். இரண்டாம் பாதி பிடிக்க வில்லையாம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டும் என்று கூறிவிட்டாராம்.

அதன் பிறகு இக்கதையை சூர்யாவிடம் சொல்லியிருக்கிறார் விக்ரம் குமார். கதையை கேட்ட சூர்யா நடிக்க உடனே ஒப்புக்கொண்டாராம். இதனால் மகேஷ்பாபுவிற்கு பதிலாக சூர்யாவை வைத்து இயக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

‘24’ படத்தில் சூர்யா மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries