வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜமௌலி

SS Rajamouli2-thumb-630x422-56257‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் ராஜமௌலி. இந்நிலையில், இப்படத்திற்குப் பிறகு மோகன்லால் நடிப்பில் ‘கருடா’ என்னும் படத்தை இயக்க இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு ராஜமௌலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கேரளா வந்திருந்த ராஜமௌலி இதுகுறித்து கூறும்போது, “கேரளா எனக்குப் பிடிக்கும். இந்த மாதிரி அற்புதமான லொகேஷன்களைப் பார்க்க முடியாது.

மோகன்லால் நான் மிகவும் மதிக்கும் கலைஞர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாகத்தான் இருக்கிறேன். ஆனால் இப்போதைக்கு என் கவனமெல்லாம் பாகுபலி 2 படத்தை உருவாக்குவது மட்டும் தான்.

கருடா படம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அப்படி ஒரு செய்தியை நான் ஊடகங்களில்தான் படித்தேன். எல்லாம் வெறும் வதந்திதான்,” என்றார்.

பாகுபலி 3-ம் பாகம் உண்டா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறவில்லை. அதே நேரம் மறுப்பும் தெரிவிக்கவில்லை. பாகுபலியின் மூன்றாவது பாகம் என்பது முதலிரு பாகங்களின் தொடர்ச்சியாக இருக்காது. கதையும் களமும் வேறாக இருக்கும் என்று ஏற்கெனவே பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online