திரைப்படங்களுக்கு மீண்டும் நிறைய பாடல்கள் எழுதுகிறேன்: பா.விஜய்

DSC_7652தமிழ் திரை உலகில் முக்கிய கவிஞராக இடம் பிடித்தவர் பா.விஜய். ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல் எழுதிய பா.விஜய் ‘ஆட்டோகிராப்’ படத்திற்காக எழுதிய ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ என்ற பாடல் தேசிய விருதை பெற்றது.

இந்த நிலையில் ஞாபகங்கள், இளைஞன் என்று திரைப்படங்களில் நடித்தார். பாடல் எழுதுவதை குறைக்கும் நிலை ஏற்பட்டது. இவருக்கு வர வேண்டிய வாய்ப்பு வேறு கவிஞர்களுக்கு சென்றது. சமீபத்தில் இவர் இயக்கி நடித்து தயாரித்த ‘ஸ்ட்ராபெரி’ படம் திரைக்கு வந்தது.

தற்போது ஒரு சில படங்களுக்கு பாடல் எழுதுகிறார். இது குறித்து கேட்ட போது….

நான் திரைப்பட பாடல் ஆசிரியராகத்தான் வந்தேன். நான் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியதால் பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்தன.

என்றாலும் தற்போது மீண்டும் நிறைய பாடல்கள் எழுதுகிறேன். பாடல் எழுதுவதற்கு இடையூறு ஏற்படாத வகையில் நடித்து வருகிறேன். மற்றபடி பாடல் எழுத மாட்டேன் என்று நான் இதுவரை யாரிடமும் கூறியது இல்லை.

நான் இயக்கி நடித்த ‘ஸ்ட்ராபெரி’ படம் வெற்றி பெற்றது. இப்போது ‘நையப்புடை’ படத்தில் நடிக்கிறேன். இது ஒரு அதிரடிப்படம் இதில் எனது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தி வருகிறேன்.

என்றாலும் திரைப்படங்களுக்கு பாடல் எழுதிவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி வருகிறேன். தொடர்ந்து நிறைய பாடல்கள் எழுதுவேன் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries