பல்வேறு குறும்பட விழாவில் கலந்துக் கொள்ளும் மஞ்சள் நீராட்டு விழா

YF_Poster_Verticalமஞ்சள் நீராட்டு விழா பற்றி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் உள்ளது.

இந்த உலகத்தில் குழந்தையாக பிறந்து, குறும்புதனம் செய்யும் சிறுமியாக வளர்ந்து, ஒரு பெண்ணாக பரிமாணம் அடையும் அற்புத தருணத்தை நமது கலாச்சாரம், பெண்ணை சீர்படுத்தி, பக்குவபடுத்தி, அழகுபடுத்தி அவர்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதைதான் மஞ்சள் நீராட்டு விழா.

இந்த விழாவின் முக்கியத்துவம் நாகரீக வாழ்க்கையில் வளர்ந்து வரும் இன்றைய சிறுமிகள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்ற பெயரில் குறும்படமாக இயக்கியிருக்கிறார்கள்.

கல்வி அறிவில்லாத அன்னை, அனுபவமிகுந்த பாட்டி என கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து 35 நிமிட குறும்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

நமது கலாச்சாரமான கோலமிடுவது அதற்குள் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் அழகாக சுட்டிகாட்டியிருக்கிறார்கள். இந்த குறும்படத்தில் சிறுமியாக நடித்திருப்பவர் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இந்த குறும்படம் சர்வதேச விழாவில் திரையிடப்பட்டு வருகிறது. மேலும் இந்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் சர்வதேச குழந்தை திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்காக தங்க யானை விருது பெற்றிருக்கிறது. உலக முழுவதும் உள்ள 56 குறும்படம் இவ்விழாவில் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries