8 வருடங்களுக்குப் பிறகு விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்

Harrisவிக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘10 எண்றதுக்குள்ள’. இதில் சமந்தா ஜோடியாக நடித்திருந்தார். விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை முதலில் கலைப்புலி தாணு, பின்னர் ஐயங்கரன் இண்டர்நேஷனல் ஆகியோர் தயாரிக்க முன்வந்து பின்னர் சில காரணங்களால் பின்வாங்கினர். தற்போது ‘புலி’ படத்தை தயாரித்த ஷிபு தமீன் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். இதற்குமுன் விக்ரம் நடிப்பில் வெளியான ‘பீமா’ படத்திற்கு ஹாரிஸ் இசையமைத்திருந்தார். 8 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்திற்குப் பிறகு தற்போதுதான் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். ‘பீமா’ படத்தின் பாடல்கள் போல் புதிய படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries