எந்திரன் 2 கதை விவாதத்திற்காக அமெரிக்கா சென்ற ரஜினி

rajini759ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து பிரம்மாண்ட வெளிவந்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது விறுவிறுப்பாக பணிகள் நடைபெற்று வருகிறது. ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தில் நடித்து வருவதால் இந்த படம் முடிவதற்குள், இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை முடித்துவிட்டு, ‘கபாலி’ படம் முடிவடைந்ததும் எந்திரன் 2 படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் ‘கபாலி’ படப்பிடிப்புக்காக மலேசியா மற்றும் தாய்லாந்து சென்று திரும்பிய ரஜினி, ‘எந்திரன்-2’ படத்தின் கதை விவாதத்துக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு பயணமாகியுள்ளார். இவருடன், இயக்குனர் ஷங்கர், படத்தை தயாரிக்கும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தாரும் உடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

விவாதம் முடிவடைந்து சென்னை திரும்பியதும் ‘எந்திரன்-2’ படத்துக்காக ரஜினிக்காக ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட் நடக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. ‘எந்திரன்-2’ படத்தில் ரஜினி சண்டையிடும் காட்சிகளுக்கு டூப் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ரஜினியின் டூப்புக்கும் ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட் நடத்தப்பட இருக்கிறது.

இதையெல்லாம் முடித்துவிட்டு, ரஜினி ‘கபாலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாத இடையில் ‘கபாலி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries