சினிமா தொழிலை தரக்குறைவாக பார்ப்பது தவறு: சமந்தா பேட்டி

15(70)சமந்தா கைவசம் 6 படங்கள் உள்ளன. தனுஷ் ஜோடியாக நடிக்கும் ‘தங்கமகன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சூர்யா ஜோடியாக ‘24’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது.

விஜய் ஜோடியாக ‘தெறி’ படத்தில் நடிக்கிறார். ‘வடசென்னை’ என்ற இன்னொரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கிறார். சமந்தா அளித்த பேட்டி வருமாறு:-

‘‘சினிமா தொழிலை சிலர் தரக்குறைவாக பார்க்கிறார்கள். இது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. சினிமாவும் மற்ற தொழில்களை போல் நல்ல தொழில்தான். டைரக்டர்களும் நடிகர் நடிகைகளும் இதை கவுரவமான வேலையாக நேசிக்கிறார்கள்.

படப்பிடிப்பு தளங்களுக்கு வந்து பார்த்தால் இது தெரியும். ஒவ்வொரு டைரக்டரும் பக்தி சிரத்தையோடு வேலை செய்கின்றனர். படப்பிடிப்பு அரங்குக்குள் வெட்டிப் பேச்சு இருக்காது. எல்லோருமே கதை மற்றும் காட்சிகள் பற்றியே பேசுவார்கள்.

என்னுடன் இதுவரை வேலை செய்த நடிகர்கள், டைரக்டர்கள் என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். தங்கள் வீட்டில் உள்ள பெண் போலவே கவனித்துக்கொண்டனர்.

படப்பிடிப்புகளுக்கு அப்பா, அம்மாவை நீங்கள் கூட்டி வருவது இல்லையே என்று என்னிடம் பலர் கேட்கின்றனர். அப்பா, அம்மாவை நடிகைகள் தங்களுடன் அழைத்து வரும் கலாசாரம் தற்போது பரவி வருகிறது.

இந்த கலாசாரம் எனக்கு பிடிக்காது. அப்பா, அம்மாவுக்கு அங்கு என்ன வேலை இருக்கிறது. எதற்காக அவர்களை அழைத்து வர வேண்டும். அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தங்களுடன் தாய்-தந்தையை அழைத்துக்கொண்டு வருவது இல்லையே.

ஏதோ ஒரு சில நடிகைகள்தான் பெற்றோரை படப்பிடிப்புக்கு அழைத்து வருகிறார்கள். எல்லா நடிகைகளும் அப்படி இல்லை.

இவ்வாறு சமந்தா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries