மாதம் ஒன்றாக பாண்டிராஜின் 3 படங்கள் ரிலீஸ்

pandirajபசங்க, வம்சம், மெரீனா, வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடித்துள்ள ‘பசங்க–2’ படம் வருகிற 4–ந்தேதி வெளியாவதாக இருந்தது. இப்போது இந்த படம் டிசம்பர் 24–ந்தேதி வெளியாகிறது.

அடுத்து இவரது இயக்கத்தில் விஷால், கேத்ரின் நடிக்கும் ‘கதகளி’ படப்பிடிப்பு முடிந்து உள்ளது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இந்த படம் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது.

இதையடுத்து சிம்பு, நயன்தாரா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. இந்த படம் பிப்ரவரி 14–ந் தேதி காதலர் தினத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ‘கதகளி’, இது நம்மஆளு படங்களை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி வெளியிடுகிறது.

டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி விழா நாட்களில் தனது படங்கள் தொடர்ந்து வெளிவருவதால் அவற்றை பாண்டிராஜ் டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries