நடிகர் ராஜ்கிரண் வெள்ளத்தில் சிக்கினார்: ராணுவத்தினர் கயிறு கட்டி மீட்டனர்

04-1449204953-rajmiransd-s600சென்னையில் நடிகர்- நடிகை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பலர் மாடிகளில் தஞ்சம் அடைந்தனர். மொட்டை மாடிகளில் நின்றபடி மீட்பு குழுவினரை அழைத்தார்கள். செல்போன்கள் வேலை செய்யாததால் மற்றவர்களுடன் அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. உணவு கிடைக்காமலும் பலர் திண்டாடினார்கள்.

முன்னாள் கதாநாயகி லட்சுமி வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால் தவித்தார். அவரை மீட்பு குழுவினர் படகில் ஏற்றி அழைத்து வந்தனர். நடிகர் சித்தார்த் வீட்டிலும் வெள்ளம் புகுந்தது. இதனால் அவர் மாடிக்கு சென்றார். இதுபோல் நடிகர் ராஜ்கிரணும் குடும்பத்தோடு வெள்ளத்தில் சிக்கினார். இவரது வீடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ளது.

அடை மழை மற்றும் அடையாறில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தென் சென்னை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ராஜ்கிரண் வீட்டிலும் வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பளவு இருந்த வெள்ளத்தின் நீர்மட்டம் சில நிமிடங்களில் மளமளவென உயர்ந்தது.

ராஜ்கிரணின் வீட்டுக்குள் வெள்ளம் சீறிப்பாய்ந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த அவர் வெள்ளத்தில் தத்தளித்தார். குடும்பத்தினரும் வெள்ளத்தில் சிக்கினார்கள். வீட்டின் வெளியே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருந்தது.

இதனால் அவரால் வெளியேயும் வர முடியவில்லை. மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த ராணுவத்தினர் அப்போது படகில் அங்கு வந்தனர். அவர்கள் ராஜ்கிரண் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதை பார்த்தார்கள்.

உடனடியாக கயிறு கட்டி ராஜ்கிரணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ராஜ்கிரண் கழுத்தளவு தண்ணீரில் கயிற்றை பிடித்தபடி படகு நோக்கி வந்தார். அப்போது வெள்ளம் அவரை இழுத்தது.

ஆனாலும் கயிற்றை விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டு படகுக்கு வந்தார். அவரை ராணுவத்தினர் பத்திரமாக படகில் ஏற்றினார்கள். இதேபோல ராஜ்கிரண் குடும்பத்தினரும் மீட்கப்பட்டார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries