எமிஜாக்சனை புகழும் ஆன்ட்ரியா

120413000403_Antriya-8‘மதராச பட்டினம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி பதித்தவர் எமி ஜாக்சன். தற்போது விஜய் நடிக்கும் ‘தெறி’, தனுசுடன் ‘தங்கமகன்’ ஆகிய படங்களில் நடித்து வரும் எமிஜாக்சன், அடுத்து ரஜினியின் ‘எந்திரன்–2’ படத்திலும் ரஜினி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடித்த எமிஜாக்சன் 2–வது முறையாக ஷங்கர் படத்தில் நடிக்க இருக்கிறார். தெறி, தங்கமகன் படங்களில் எமிஜாக்சனும் இணைந்து நடித்து வரும் சமந்தா அவரது நெருங்கிய தோழியாகிவிட்டார். இப்போது தங்க மகன் படத்தில் நடித்துள்ள எமிஜாக்சனுக்கு டப்பிங் பேசும் ஆன்ட்ரியாவும் அவரை புகழ்ந்துள்ளார்.

எமிஜாக்சனுக்கு டப்பிங் கொடுக்கும் முன்பு அவரது பேச்சு மற்றும் நடவடிக்கை குறித்து அறிந்து கொள்வதற்காக எமிஜாக்சனுடன் ஆன்ட்ரியா பழங்கினார். இதுகுறித்து கூறிய அவர்… குரல் பொருத்தம் மற்றும் பேசும் விதம்பற்றி அறிவதற்காக எமியுடன் பேசினேன். அப்போது அவர் மிகவும் நட்புடன் பழகினார். இதில் அவர் எனது நெருங்கிய தோழியாகிவிட்டார்.

இதனால் அவரது குரலுடன் பொருந்தும் வகையில் ‘டப்பிங்’ பேசி இருக்கிறேன். அவரது நடவடிக்கைகளை நேரில் அறிந்தால்தான் டப்பிங் பேச எளிமையாக இருந்தது. அவர் பழகும் விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online