கனமழை எதிரொலி: சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு

13TH_FILM_FESTIVAL_1294532f-copyவருடாவருடம் சென்னையில் டிசம்பர் மாதத்தில் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த வருடம் டிசம்பர் 10-ந் தேதி தொடங்குவதாக இருந்த சென்னை சர்வதேச திரைப்பட விழா கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட மழையினாலும் வெள்ளத்தினாலும், பொதுமக்கள் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலை படிப்படியாக திரும்பி கொண்டிருக்கும் இந்நிலையில் இம்மாதம் 10ஆம் தேதி நடக்கவிருந்த 13-ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போதைக்கு தள்ளி வைக்கபட்டுள்ளது.

விழாவின் புதிய அட்டவணை நாள், நேரம் மற்றும் இடத்தின் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சென்னை சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் சார்வில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries