வெள்ள நிவாரண நிதிக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்த கமல்ஹாசன்

kamal-haasan-21சென்னையில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

திரை நட்சத்திரங்களும் நேரடியாக மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்களும், ஹன்சிகா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நடிகைகளும் நடிகர் சங்கம் மூலம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் 15 லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இந்த பணத்தை கமல் தன்னுடைய மேனேஜர் மூலம் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries