தங்கமகன் படத்திற்கு யு சான்றிதழ்

Dhanush’s-Thanga-Magan-gets-official-release-dateதனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இசையைமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியானது. தனுஷ்-அனிருத் கூட்டணியில் வெளியான மெலோடி பாடல்களுக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதுவும் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது.

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை இன்று தணிக்கை குழுவிற்கு அனுப்பப் பட்டுள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து படத்தை இம்மாதம் 18ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries