முதல் நாள் ரஜினியுடன் நடித்ததை மறக்க முடியாது: ராதிகா ஆப்தே

rajinikanth-radhika759ரஜினியின் ‘கபாலி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. 2–ம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடந்து வருகிறது.

ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். இவர்கள் தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்படுகிறது. முதல் நாள் படப்பிடிப்பில் ராதிகா ஆப்தே கலந்து கொண்டபோது ரஜினியின் காலைத் தொட்டு வணங்கி, அவரிடம் ஆசி பெற்றார்.

பின்னர் அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கியதும் ராதிகா ஆப்தே பதட்டமானார். நடிப்பதற்கு திணறினார்.

தன்னுடன் நடிப்பதால் ராதிகா ஆப்தே பதட்டம் அடைந்ததை புரிந்து கொண்ட ரஜினி, பின்னர் ராதிகா ஆப்தேவை அழைத்து அவருடன் சாதாரணமாக பேசினார். தனது படப்பிடிப்பு அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். யதார்த்தமாக ரஜினி பேசியதையும், அவரது எளிமையையும் கண்ட ராதிகா ஆப்தே சகஜ நிலைக்கு வந்தார்.

அதன் பிறகு இயக்குனர் சொன்ன காட்சிகளுக்கு ஏற்ப சிறப்பாக நடித்தார். ரஜினியுடன் முதல் நாள் நடித்த அனுபவம் குறித்து கூறிய ராதிகாஆப்தே…

நான் ரஜினி சாருடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தேன். நடிக்க வேண்டிய காட்சி என்ன என்பது பற்றி ஏற்கனவே எனக்கு குறிப்பு தந்து விட்டார்கள். வசனத்தையும் எழுதி அனுப்பி இருந்தார்கள். நடித்து ஒத்திகை பார்த்து தயாராக இருந்தேன்.

ஆனால் ரஜினி சாரை பார்த்ததும் பதட்டம் ஏற்பட்டதால் எல்லாமே தலைகீழாகி விட்டது. பின்னர் அவரது ஆலோசனைப்படி என்னை சரி செய்து கொண்டேன். முதல் நாள் படப்பிடிப்பையும், அவருடன் நடித்த போது ஏற்பட்ட உற்சாகத்தையும் அனுபவத்தையும் மறக்க முடியாது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries