சல்மான்கான் வழக்கு கடந்து வந்த பாதை

IndiaTv9ddc6e_salman-khan-courtஇந்தி நடிகர் சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கில், அவருக்கு மும்பை செசன்சு கோர்ட்டு விதித்த 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையை ஐகோர்ட்டு ரத்து செய்து அவரை விடுதலை செய்தது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை விவரம் வருமாறு:-

2002, செப்டம்பர் 28:- சல்மான்கானின் கார் பாந்திரா, ல் ரோட்டில் உள்ள அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேக்கரியினுள் புகுந்தது. இந்த விபத்தில் நடைபாதையில் படுத்து தூங்கிய ஒருவர் பலியானார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

2006, அக்டோபர்:- சல்மான்கான் மீது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு.

2007, மே:- விபத்தின்போது சல்மான்கான் குடிபோதையில் இருந்தது ரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் சல்மான்கான் பாந்திரா போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

2014, நவம்பர் 24:- சல்மான்கான் மீதான வழக்கு கடுமையான குற்றப்பிரிவின் கீழ் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்து செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு மறுவிசாரணை தொடங்கியது.

2015, மார்ச் 27:- கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி தேஷ்பாண்டே முன்பு சல்மான்கானிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

மார்ச் 28:- விபத்தின்போது நான் தான் காரை ஓட்டினேன் என்று சல்மான்கானின் குடும்ப டிரைவர் அசோக் சிங் செசன்சு கோர்ட்டில் வாக்குமூலம் அளித்தார்.

மே 6:- சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து, மும்பை ஐகோர்ட்டு அவருக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் அளித்தது.

மே 8:- தண்டனையை எதிர்த்து சல்மான்கான் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட்டு ஏற்று, விசாரணையை தள்ளிவைத்தது. ஜாமீனும் நீட்டிக்கப்பட்டது.

செப்டம்பர் 21:- சல்மான்கான் அப்பீல் மனுவை தினசரி அடிப்படையில் விசாரிக்க ஏ.ஆர்.ஜோஷி தொடங்கினார்.

டிசம்பர் 10:- அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் சல்மான்கான் விடுவிக்கப்படுவதாக கூறி நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online