பாகுபலி 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடக்கம்

Baahubali-2-bahubali-2-may-delay-due-to-Sweety-Anushka-Devasena-bahubali-2-the-conclusion-release-date-story-leaked-images-updatesபிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர், தமன்னா நடிப்பில் இந்த வருடம் பிரம்மாண்டமாக வெளிவந்த படம் ‘பாகுபலி’. இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். சரித்திர பின்னணியில் உருவாகியிருந்த இப்படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், இரண்டு பாகமாக உருவாகியிக்கும் இப்படத்தின் முதல்பாகத்தை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு இரண்டாம் பாகம் வெளியாகும் என படக்குழுவினர் கூறியிருந்தனர்.

பாகுபலி 2-ம் பாகத்தை எடுப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் சமீபத்தில் தொடங்கியது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களை ராஜமௌலி, தனது குழுவினரிடம் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், வருகிற டிசம்பர் 15-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ‘பாகுபலி-2’ பாகத்தின் படப்பிடிப்புகளை ராஜமௌலி தொடங்கவிருக்கிறார்.

ஏற்கெனவே, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் 40 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், மீதி படப்பிடிப்புகளை நடத்தி விரைவில் முடிக்கவுள்ளனர். 2016-ம் வருடம் இறுதி அல்லது 2017-ம் ஆண்டின் ஆரம்பத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

‘பாகுபலி’ முதல் பாகத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் குறைவாகவே இருந்தது. இரண்டாம் பாகத்தில் அவருக்கே முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் வீரம் நிறைந்த அரசியாக வருவார் என்றும் கூறப்படுகிறது.

முந்தைய பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை இன்னும் விறுவிறுப்புடன் கொண்டு செல்ல இயக்குனர் ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online