மழையால் பாதித்த சென்னை பெண்களுக்கு நயன்தாரா உதவி

nayantharaமழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு மத, இன, மாநில பாகுபாடு இல்லாமல் அனைவரும் உதவினார்கள். நடிகர்– நடிகைகள் பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார்கள். நிதியும் அளித்தனர்.

தமிழக நடிகர்–நடிகைகள் மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி, மலையாள நடிகர்களும் தாராளமாக வழங்கி மெய்சிலிர்க்க வைத்தனர். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்தும் நடிகர், நடிகைகள் உதவினார்கள்.

தமிழ் பட நடிகைகளில் ஹன்சிகா ரூ.15 லட்சம், ஸ்ரீதிவ்யா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார்கள். இது போல் நயன்தாராவும் ரூ.20 லட்சம் வழங்கி இருக்கிறார்.

இதுதவிர சென்னை மக்களுக்கு தேவையான பொருட்களையும் அனுப்பி உதவி செய்துள்ளார். மலையாள பத்திரிகை ஒன்று ‘அன்புடன் சகோதரிகளுக்கு’ என்ற பெயரில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நிவாரண பொருட்களை திரட்டி அனுப்பியது.

இதை அறிந்த நயன்தாரா அந்த பத்திரிகையுடன் இணைந்து சென்னை பெண்களுக்காக நிவாரண பொருட்களை வழங்க முன் வந்தார். இதற்காக நயன்தாரா தனிப்பட்ட முறையில் ஆயிரம் பார்சல்களை அளித்தார். அதில் பெண்களுக்கான உடைகள், அவசர தேவைக்கான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இது தவிர அவரது தோழிகளான மற்ற நடிகைகள் மூலமும் பெண்களுக்கான பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online