வெள்ளம் பாதித்தவர்களுக்கு நடிகைகள் சமந்தா– ரம்பா நிவாரண உதவி

Rambha_EPSதமிழக வெள்ள பாதிப்புக்காக முதல்–அமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகிறார்கள்.

பல்வேறு மாநில முதல்– மந்திரிகள், தொழில் அதிபர்கள், தன்னார்வ அமைப்பினர், நடிகர், நடிகைகள் என பலரும் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர்.

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ரூ.23 லட்சத்துக்கான காசோலையும், ரூ.2 லட்சத்துக்கான மருத்துவ பொருட்களையும் தமிழக வெள்ள நிவாரண உதவிக்காக அளித்துள்ளார்.

தமிழகத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ், பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ், நடிகை ஸ்ரீதிவ்யா, உள்ளிட்டோர் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கம் மூலமாக முதல்–அமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி உள்ளனர்.

நடிகை சமந்தா தமிழக முதல்–அமைச்சரின் நிவாரண நிதிக்கு தெலுங்கு திரைப்படத் துறையினர் திரட்டி வரும் அமைப்புக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை வழங்கி உள்ளார்.

சினிமாவை விட்டு விலகி இரு குழந்தைகளுக்கு தாயாகி கனடாவில் வசித்து வரும் நடிகை ரம்பா தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக நடிகர் சங்கத்தில் ரூ.5 லட்சம் வழங்கி உள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online