சூர்யா நகரை தத்தெடுத்த மணிரத்னம் சுஹாசினி

suhashini-maniratnamதமிழகத்தில் பெய்த கன மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நடிகர், நடிகைகள், அரசியல் வாதிகள் உள்ளிட்ட பலர் உதவி செய்து வருகிறார்கள். மேலும் நடிகர் சங்கம் மூலமாக பல நடிகர்கள், நடிகைகள் நிவாரண நிதி கொடுத்து வருகிறார்கள்.

அடுத்த கட்டமாக இயக்குனர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி ஆகியோரின் நாம் இயக்கத்தின் சார்பில் சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்துள்ளனர்.

தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளை செய்து வரும் இந்நிலையில் நாம் இயக்கம் அரசுக்கு தோள் கொடுத்து உதவும் வகையில் பணியை செய்து வருகிறது.

சூர்யா நகரை தத்தெடுத்த மணிரத்னம், சுஹாசினி முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை நாம் குழுவினர் மூலமாக வழங்கியுள்ளனர். மேலும் மருத்துவ உதவிகள், கலந்தாய்வுகள் உட்பட பல உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries