பேய் படத்தில் சிம்ரன்

Two-releases-for-Simran-this-year-Trisha-Illana-Nayanthara-and-Karaioramதமிழ் திரை உலகின் முக்கிய கதாநாயகியாக இருந்த சிம்ரனுக்கு திருமணத்துக்கு பிறகு எதிர்பார்த்தப்படி படங்கள் அமையவில்லை.

தெலுங்கு நடிகர் நானி நடித்த ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். ‘திரிஷா இல்லேன்னா நயன்தாரா’ படத்தில் நடித்தார். அடுத்து அவரே தயாரித்து நடிக்கும் ‘கரையோரம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடக்கிறார்.

இதையடுத்து சிம்ரனுக்கு மேலும் பல பட வாய்ப்புகள் வரத்தொடங்கி உள்ளன. சமீபத்தில் பாலா என்ற புதிய இயக்குனர் சிம்ரனுக்கு ஒரு கதை சொன்னார்.

அது பிடித்துவிட்டதால் அந்த படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இது நயன்தாரா நடித்த ‘மாயா’ போன்ற கதையம்சம் கொண்ட பேய் படம். 2 குழந்தைகளுக்கு தாயாக சிம்ரன் இதில் நடிக்க உள்ளார். இவரது ஜோடியாக புதுமுக நடிகர் நடிக்கிறார்.

இந்த படத்தில் கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்பட பலர் நடிக்க இருக்கிறார்கள். பேய் வந்து சிம்ரனை மிரட்டுதா, சிம்ரன் பேய் வேடத்தில் நடிக்கிறாரா? என்ற தகவல் ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டுள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries