வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமீதா நேரில் நிவாரண உதவி

namitha-flood-relief-chennai-tiruvotriyur_145006499970திருவொற்றியூர் சடையங்குப்பம், பாட்டை பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடிகை நமீதா பாய், போர்வை, கம்பளி உள்ளிட்ட நிவாரண உதவிகளை நேரில் வழங்கினார். பின்னர் நடிகை நமீதா, நிருபர்களிடம் கூறும்போது,

“தமிழக மக்களை இயற்கை பேரழிவு பெரிதும் பாதித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும், தொண்டு நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். இதனால் மக்கள் இழப்பில் இருந்து மீண்டு வருகின்றனர். நான் டிசம்பர் 2-ந்தேதியில் இருந்தே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறேன்.

படப்பிடிப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து இரவு- பகல் பாராமல் சென்னையின் பல பகுதிகளுக்கும் சென்று உதவிகளை செய்து வருகிறேன். இது மனதுக்கு நிம்மதியை தருகின்றது. தொடர்ந்து அனைவரும் நிவாரண பணிகளை செய்ய வேண்டும்” என்றார்.

அப்போது நமீதாவுடன் திருவொற்றியூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் தேசியமணி, லோகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online