பொங்கல் தினத்தன்று ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்

GV-prakash‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷும் கயல் ஆனந்தியும் புது படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

ஜி.வி.பிரகாஷை வைத்து ‘டார்லிங்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கி வருகிறார். லைக்கா புரொடக்‌ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை பொங்கல் தினத்தன்று வெளியிட இருப்பதாக ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, தற்போது நடித்து வரும் ‘புருஸ் லீ’, ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ ஆகிய வித்தியாசமான தலைப்புகளை வைத்து ரசிகர்களை கவர்ந்த ஜி.வி.பிரகாஷ், புதிய படத்திற்கும் வித்தியாசமான தலைப்பை தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries