ரஜினி பட ரீமேக்கில் விஜய்

Rajinikanth-Vijay-Modiரஜினி நடித்த படங்களின் பெயர்களை தங்கள் படத்துக்கு வைத்துக் கொள்ள கடும் போட்டி உள்ளது.

தனுஷ் நடிப்பில் விரைவில் வர இருக்கும் படத்துக்கு ரஜினி படமான ‘தங்கமகன்’ பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜீவா நடித்து வரும் படத்துக்கு ‘போக்கிரி ராஜா’ பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதி படத்துக்கு ரஜினியின் ‘தர்மதுரை’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இதுபோல் ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘பில்லா’ படத்தின் மறுபதிப்பில் 8 வருடங்களுக்கு முன்பு அஜீத் நடித்தார். இதுவும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் ‘ரீமேக்’ செய்தார்.

தற்போது கே.எஸ்.ரவிக்குமார், ‘ரீமேக்’ செய்ய இருக்கும் ரஜினியின் ‘மன்னன்’ திரைப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விஜய்யின் 60–வது படம் தொடங்கியபிறகு ‘மன்னன்’ ரீமேக்கில் அவர் நடிக்கிறார்.

மன்னன் படத்தில் ரஜினி ஏற்ற வேடம் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதியதால் அவர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கோடம்பாக்கம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries