18 ஆண்டுகளுக்கு பிறகு மறு பிறவி எடுக்கும் கமலின் மருதநாயகம்

Marudhanayagam1997–ம் ஆண்டு மருதநாயகம் படத்தை கமல் தொடங்கினார். இங்கிலாந்து ராணி எலிசபெத் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டார். கமலே கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடித்தார். பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த படம் கைவிடப்பட்டது.

யாராவது தயாரிக்க முன் வந்தால் மருதநாயகம் மீண்டும் தொடங்கப்படும் என்று கமல் கூறி இருந்தார். சில தினங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில், லண்டனில் உள்ள தனது நண்பர் இந்த படத்தை தயாரிக்க முன் வந்து இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான அய்ங்கரனின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கமலின் மருதநாயகம் மறு பிறவி எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினியின் எந்திரன்–2 படத்தை மெகா பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த படத்தின் வேலைகள் தொடங்கிய பிறகு மருதநாயகம் படத்தையும் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online