சிம்பு, அனிருத் இந்த தேசத்தின் காற்றை சுவாசிக்க தகுதியற்றவர்கள்: ராஜேஷ்குமார்

22CBMPRAJESH_KUMAR1_555732f‘க்ரைம்’ நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது ‘பேஸ்-புக்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஒரு பெண்ணாக இருக்கிற இந்த தமிழ்நாட்டில் சிம்புவும், அனிருத்தும் பெண்களை கொச்சைப்படுத்தும் பாடலை பாடவும், அதை நியாயப்படுத்தவும் துணிந்திருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட துணிச்சலை முதல்-அமைச்சர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறியவேண்டும். நாட்டையே தாயாக எண்ணி அதற்கு பாரத மாதா என்ற அழகான பெயர் சூட்டி நேசித்து வருகிறோம்.

சிம்பு, அனிருத் போன்றவர்கள் இந்த தேசத்தில் வீசும் காற்றை கூட சுவாசிக்க தகுதியற்றவர்கள். பெண் என்பவள் உடம்பால் மென்மையானவள். ஆனால் உள்ளத்தால் இரும்பை போன்றவள். ஒவ்வொரு பெண்ணும் பூவில் செய்த ஒரு ஆயுதம் என்பதை சிம்பு போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries