எந்திரன் 2 படப்பிடிப்பு இன்று தொடக்கம்

Enthiran-2 (1)ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த ‘எந்திரன்’ படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பையும், வசூலில் பெரிய சாதனையையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இந்த படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஐஸ்வர்யா ராய், கருணாஸ், சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஷங்கர் மும்முரமாக களமிறங்கினார். முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை மிக அதிக பட்ஜெட்டில் உருவாக்க முடிவு செய்தார்.

அதன்படி, இரண்டாம் பாகத்தின் கதையை ரஜினியிடம் சொல்லி, ஓகே வாங்கிவிட்டு அதற்கான பணிகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். ரஜினியின் பிறந்தநாளன்று இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், ஒருசில காரணங்களால் அன்று படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது.

இதையடுத்து இன்று இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவிருப்பதாக ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ரஜினி தற்போது ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். விரைவில் எந்திரன்-2 படப்பிடிப்பில் இணைவார் என்று கூறுப்படுகிறது.

எந்திரன்-2 கதாநாயகியாக எமி ஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், இப்படத்தில் வில்லன் வேடத்துக்கு அர்னால்டு தேர்வாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online