வாட்ஸ்-அப்பில் பரவும் சிம்பு பாடிய பழைய பாடல்கள்

simbu-starrer-kaans-first-look-poster-from-june-17th-photos-pictures-stillsஅனிருத் இசையில் சிம்பு பாடியதாக, கூறப்படும் ஆபாச பாடலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆபாச பாடலை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமாவிலும், ஆல்பங்களிலும் இந்த பாடலை பயன்படுத்த அனுமதிக்க கூடாது என்று தணிக்கை குழுவுக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன ஆபாச பாடல் சர்ச்சையை தொடர்ந்து சிம்பு ஏற்கனவே பாடிய பழைய பாடல்களை பலர் ‘வாட்ஸ்-அப்’களில் பரப்பி வருகிறார்கள்.

சிம்பு பாடிய ‘‘கொல்லாம என்ன கொன்னுட்டாடா.. ஒரு ஆயுதம் எதுவும் தாக்காமலே..பொண்ணுங்க மனச தொறந்தா அந்த பூவே பீர் அடிக்கும்..

கண்ணை பாத்துப்புட்டு போதை ஏத்திப்புட்டு வேணாம்னு சொன்னாடா..சும்மா பக்கத்துல வருவா, மனச தருவேன்னு தருவா, பசங்க நிம்மதிய கெடுப்பா, ரெண்டு நாளில் மறப்பா, உன் கதையத்தான் முடிப்பா.. அட பொண்ணுங்க ஒண்ணும் ஆட்டிப்படைக்கும் கடவுள் இல்ல’’ என்ற வரிகளுடன் கூடிய பாடல் வாட்ஸ்- அப்பில் நேற்று வெளியானது.

இதுபோல் மேலும் பல பாடல்களை வாட்ஸ்-அப்பில் பரப்புகிறார்கள். சிம்பு சினிமாவில் 60-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இவற்றில் சில பாடல்களை அவரே எழுதி பாடி உள்ளார். பெரும்பாலும் அவை குத்துப்பாடல்கள்தான். ‘வானம்’ படத்தில் எழுதி பாடிய ‘‘எவன்டி உன்ன பெத்தான் கையில கிடைச்சா செத்தான்’’ என்ற பாடல் ஏற்கனவே சர்ச்சையை கிளப்பியது.

இந்த பாடலுக்கும் பெண்கள் அமைப்புகள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தன. தணிக்கை குழுவினர் இதுபோன்ற பாடல்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் வற்புறுத்தப்பட்டன. இதுபோல் ‘வல்லவன்’ படத்தில் சிம்பு பாடிய ‘‘லூசுப்பெண்ணே, லூசுப்பெண்ணே, லூசுப்பெண்ணே.. லூசுப்பையன் உன்னால தான் லூசா சுத்துறான்’. என்ற பாடலும் விமர்சனங்களை கிளப்பியது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries