கேரளாவில் 5 மலையாள படங்களுடன் மோதும் பசங்க–2

Pasanga 2பாண்டிராஜ் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரங்களுடன் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடித்துள்ள படம் ‘பசங்க–2’ நகர்புறத்தில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை முறையை கலகலப்பாக சொல்லும் படமாக இது உருவாகி இருக்கிறது.

இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு திரைக்கு வர இருந்தது. மழை காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 24–ந்தேதி ‘ரிலீஸ்’ ஆகிறது. தெலுங்கு, மலையாளத்திலும் இந்த படம் வெளியாகிறது.

வருகிற 24–ந்தேதி மலையாளத்தில் திலீப் அவரது மனைவி மஞ்சுவாரியர் நடித்த படங்கள் மோத இருக்கின்றன. இதுதவிர துல்கர்சல்மான் படம் உள்பட மேலும் 3 மலையாள படங்களும் வர இருக்கின்றன. மலையாளத்தில் வரும் 5 படங்களுடன் சூர்யாவின் ‘பசங்க–2’ திரைப்படமும் திரைக்கு வருகிறது.

சூர்யாவுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமலாபாலும் நடித்து இருக்கிறார். எனவே 5 மலையாள படங்களுடன் போட்டி போட்டாலும் ‘பசங்க–2’ வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online