ரன்வீர் மீசையை வெட்டிய தீபிகா படுகோனே

drரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து வெளிவந்துள்ள படம் ‘பாஜிராவ் மஸ்தானி’. இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

போர் வீரனின் காதலால் அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை படமாக இயக்கியிருக்கிறார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்திற்காக ரன்வீர் முறுக்கு மீசை வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் இன்று வெளியாவதையொட்டி இப்படத்திற்கான கெட்டப்பில் இதுவரை இருந்த ரன்வீரின் மீசையை தீபிகா படுகோனே வெட்டியிருக்கிறார். இதன் வீடியோ தற்போது இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரன்வீர் மீசையை வெட்டியதில் தீபிகாவுக்கு அப்படி ஒரு ஆனந்தம். அதன் பின் வெளியான புகைப்படத்தில் மீசை, தாடி மிகவும் குறைந்த ரன்வீரைப் பார்க்க முடிகிறது. ஏற்கெனவே, இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பல விஷயங்களை செய்திருக்கிறார்கள். அதேபோல் இந்த வீடியோவும் படத்தின் விளம்பரத்திற்காகத்தான் என்று கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries