விஜய் டைட்டிலை கைப்பற்றிய விக்ரம்

with-vikram-and-vijay-so-early-in-her-career‘10 எண்றதுக்குள்ள’ படத்திற்குப் பிறகு விக்ரம், ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இப்படத்தில் விக்ரம் தாடி வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது ‘மாரீசன்’ என்ற தலைப்பை வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘புலி’ படத்துக்கு ‘மாரீசன்’ எனும் தலைப்புதான் பரிசீலனையில் இருந்தது. பின்னர் ‘புலி’ தலைப்பு இறுதி செய்யப்பட்டது.

புலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் தான் விக்ரம் நடிக்கும் படத்தை தயாரிப்பதால் இப்படத்திற்கு ‘மாரீசன்’ என தலைப்பு வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

‘மாரீசன்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், லடாக் மற்றும் சென்னையில் நடைபெற இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries