மோசமான பாடலையும் பிரபலமாக்குவது நாம் தான்: சினேகா

Sneha-out-of-Kochadaiyaanஇணைய தளத்தில் வெளியான சிம்புவின் ஆபாச பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் சிம்புவும், அதற்கு இசை அமைத்ததாக கூறப்படும் அனிருத்தும் பல்வேறு அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்பின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளனர்.

இந்த பாடல் பற்றிய கருத்துக்களால் அதை கேட்க விரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ‘வாட்ஸ்–அப்’மூலம் இந்த பாடல் முன்பைவிட வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து கருத்து சொன்ன சினேகா… ஒரு பாடலை பிரபலமாக்குவது நாம்தான். பெண்களை பெருமையாக வர்ணிக்கும் பாடல்களும் இருக்கின்றன. ‘அடிடா… அவள’ என்பது போன்ற பாடல்களும் வந்து இருக்கின்றன. இதையெல்லாம் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதை நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் ஒரு பாடலை பற்றி நாம் திரும்பத் திரும்ப பேசுவதால் அதை பிரபலமாக்கிவிடுகிறோம். அந்த பாடல் ஹிட் ஆக நாம் காரணமாக இருக்கிறோம்.

தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் பாடலை நான் இதுவரை கேட்கவில்லை. பலர் என்னிடம் அது பற்றி கேள்வி கேட்பதால் அந்த பாடலை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் வந்திருக்கிறது.

அது தவறான பாடல் என்று தெரிந்த பிறகும் அது பற்றி ஏன் மீண்டும் மீண்டும் பேச வேண்டும். பேசாமல் விட்டு விட்டாலே அந்த பாடல் பற்றிய பேச்சே வந்திருக்காது.

என்றாலும் ஆபாச பாடல் என்பதால் ஒரு பெண் என்ற முறையில் இதுபோன்ற பாடல்களை எதிர்க்கிறேன். குழந்தைகளும் பாடல்களை கேட்கிறார்கள். எனவே மோசமாக பாடல்களை கேட்கிறார்கள். எனவே மோசமான வரிகளை பாடல்களில் திணிக்க வேண்டாம் என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online