மூன்று ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் நாசர் மகன்

luthfudeen_bashaபிரபல நடிகர் நாசரின் மகன் லூத்புதீன் பாட்ஷா. இவர் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின்னர், ஏ.எல்.விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து, தற்போது புதுமுக இயக்குனர் தனபால் பத்மநாபன் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் பாட்ஷாவுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ‘சரபம்’ படத்தில் நடித்த சலோனி லுத்ரா ஆகியோர் இப்போதைக்கு ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். மூன்றாவது நாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படம் கமர்ஷியல் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர்.

இரண்டாவது படத்திலேயே மூன்று ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் வாய்ப்பு கிடைத்தது பாட்ஷாவுக்கு மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது எனலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online