‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இதையடுத்து ‘ருத்ரமாதேவி’ படம் அனுஷ்காவை முன்னிலைப்படுத்தும் சரித்திர படமாக வெளிவந்தது. அடுத்து ‘இஞ்சி இடுப்பழகி’ படமும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவே இருந்தது.
ஆனால் இந்த 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த அனுஷ்கா ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்டார்.
தற்போது அவர்களின் ஆலோசனைப்படி நல்ல நேரம் பார்த்து தான் வீட்டை விட்டு வெளியே வருகிறார். நல்ல நேரம் பார்த்துதான் கேமரா முன்பு நிற்கிறார் என்கிறார்கள்.