புத்தாண்டில் வெளியாகும் மாலை நேரத்து மயக்கம்

maxresdefaultபுத்தாண்டு நெருங்கிக் கொண்டே வருகிறது. இந்த புத்தாண்டில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்த்தால், அனைவருடைய படங்களும் இன்னும் படப்பிடிப்புகூட முடியாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆகையால், சிறு பட்ஜெட் மற்றும் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் படங்கள் ஆகியவை புத்தாண்டு தினத்தை ஆக்கிரமித்துள்ளன.

அந்த வரிசையில் இந்த புத்தாண்டில் தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேய்கள் ஜாக்கிரதை’ படம் வெளிவருகிறது. அதுமட்டுமில்லாமல், கருணாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘அழகு குட்டி செல்லம்’ என்ற படமும் புத்தாண்டுக்கு வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படமும் புத்தாண்டு தினத்தில் வெளியாகிறது.

நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தை முதலில் செல்வராகவன்தான் இயக்கினார். பின்னர், தனது மனைவியிடம் இயக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, படத்தின் வசனத்தை மட்டும் செல்வராகவன் எழுதியுள்ளார்.

அம்ரித் இசையமைத்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நீண்டகால தயாரிப்பில் இருந்த படம் ஒருவழியாக வருகிற ஜனவரி 1-ந் தேதி வெளியாகவிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு செல்வராகவன் கைவண்ணத்தில் வெளிவரும் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries