கணவருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை நஸ்ரியா

hqdefaultமலையாள நடிகை நஸ்ரியா நசீம். ‘மேட் டாட்’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி, பிரபலமானவர். தமிழில் ‘நேரம்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘ராஜா ராணி’, ‘நையாண்டி’, ‘திருமணம் என்னும் நிக்ஹா’ ஆகிய படங்களிலும் நடித்து பிரபலம் ஆனார்.

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நேரத்தில் மலையாள டைரக்டர் பாசில் மகன் பகத் பாசிலை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த 20–ந்தேதி இவருக்கு 21 வயது பிறந்தது. இதே நாளில் தான் இவரது சகோதரருக்கும் பிறந்தநாள். எனவே இருவரின் பிறந்தநாளையும் குடும்பத்தார் உற்சாகமாக கொண்டாடினர்.

அன்று நஸ்ரியா தனது சகோதரர் மற்றும் கணவர் பகத் பாசிலுடன் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டினார். இந்த படங்களை அவரது கணவர் பகத் பாசில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries