குழந்தைகள் மனதில் மதிப்பெண்களை விட மதிப்பான எண்ணங்களை விதைக்க வேண்டும் : சூர்யா

sdfdsசூர்யா, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சேர்ந்து தயாரித்துள்ள படம் ‘பசங்க–2’ சூர்யா, அமலாபால், பிந்து மாதவி இவர்களுடன் குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

‘பசங்க–2’ அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய சூர்யா…, ‘சென்னையில் மிகப்பெரிய வெள்ளச்சேதம் ஏற்பட்டு, அதற்கான நிவாரண வேலைகளும் நடந்து கொண்டிருந்த போது, ‘பசங்க–2’ படத்தின் வேலைகளும் நடிந்து கொண்டிருந்தது. அதனால் இந்த படம் பற்றி அப்போது நான் பேசவில்லை.

இந்த வெள்ளம் சென்னைக்கு ஒரு அடையாளம் கொடுத்தது. நாங்கள் இருக்கிறோம் என்று போர் குணத்தோடு தன்னார்வ தொண்டர்கள் பணியில் ஈடுபட்டன. முகம் தெரியாத மனிதாபிமானம் கொண்ட அத்தனை தன்னார்வலர்களுக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கம். இவர்கள் சென்னைக்கு புதிய அடையாளத்தை தேடி கொடுத்திருக்கிறார்கள்.

இப்போது ‘பசங்க–2’ படம் பற்றி செல்றேன். எந்த மாதிரி படங்களை உருவாக்க வேண்டும் என்று பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினோமோ அந்த மாதிரி படத்தை இப்போது தயாரித்து இருக்கிறோம்.

‘பசங்க’ படத்தை தயாரித்து தேசிய விருது பெற்ற பாண்டிராஜ் எங்களுடன் இணைந்து ‘பசங்க–2’ படத்தை தயாரிக்க முன்வந்ததற்கு நன்றி கூறுவது என் கடமை. குழந்தைகளை பராமரிக்க வேண்டியது, ஒவ்வொரு பெற்றோரின் கடமை. அதை வலியுறுத்தும் படம் இது.

நான் சின்ன குழந்தையாக இருந்த போது, அம்மா, அப்பா என்னுடன் இல்லாத நேரத்தில் அவர்கள் மீது கோபப்பட்டிருக்கிறேன். நாங்கள் சிறுவயதில் வெளியே போய் கிரிக்கெட் விளையாடுவோம். நண்பர்களின் வீட்டுக்கு சென்று அங்கேயே பேசிக் கொண்டிருப்போம். வீட்டுக்கு வெளியே நிறைய நேரம் இருப்போம். இப்போது அப்படி இல்லை.

குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வருகிறோம். எனவே, குழந்தைகளுடன் பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த படத்தில் நிறைய விஷயங்களை சொல்லி இருக்கிறோம். பெற்றோருக்கு பாடம் நடத்துவது போல அல்ல. வாழ்க்கை இப்படி இருந்தால் நல்லது என்று சொல்லி இருக்கிறோம்.

குழந்தைகள் மனதில் மதிப்பெண்களை விட, மதிப்பான எண்ணங்கள்தான் வளர வேண்டும். 70 கிலோ எடை கொண்ட உருவம் 10 கிலோ உருவத்தை அடிப்பது எவ்வளவு பெரிய வன்முறை’ என்பது போன்ற வசனங்கள் இதில் இருக்கிறது. இது குழந்தைகளுக்கான படம்’ என்றார்.

பேட்டியின்போது பிந்துமாதவி, வித்யா பிரதீப், 2டி ராஜசேகர், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உடன் இருந்தனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries