சந்தானத்தை கழட்டி விட்ட ராஜேஷ்

Santhanam-Rajesh‘சிவா மனசுல சக்தி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ போன்ற படங்கள் வரிசையாக ஹிட்டானதால் கோலிவுட்டின் ஹாட்ரிக் இயக்குனராக வலம்வந்தார்.

இப்படங்களுக்குப் பிறகு இவர் இயக்கிய ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படங்கள் தோல்வியைத் தழுவி ராஜேஷின் ஹாட்ரிக் இமேஜை காலி செய்தது.

இதனால் அடுத்து வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தயாராகியிருக்கும் ராஜேஷ், ஜி.வி.பிரகாஷை வைத்து ‘கடவுள் இருக்கிறான் குமாரு’ என்ற படம் இயக்கவுள்ளார்.

இப்படமும் ராஜேஷின் வழக்கமான காமெடி படமாக உருவாக இருக்கிறது. இதில் ராஜேஷின் ஆஸ்தான நடிகரான சந்தானம் இப்படத்தில் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இவருக்கு பதிலாக பால சரவணன் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries