பழம்பெரும் இந்தி நடிகை சாதனா மரணம்

l_84318_102709_updatesபழம்பெரும் இந்தி நடிகை சாதனா ஷிவ்தாசனி மும்பையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. 1941–ம் ஆண்டு ஒன்று பட்ட இந்தியாவின் கராச்சி (இப்போது பாகிஸ்தானில் உள்ளது) நகரில் சிந்தி குடும்பத்தில் பிறந்தார்.

பாகிஸ்தான் பிரிவினையின் போது சாதனா ஷிவ்தாசனி குடும்பம் மும்பைக்கு குடி பெயர்ந்தது. இங்கு ஆரம்ப கால இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார்.

1955–ம் ஆண்டு தனது 15 வயதில் ராஜ்கபூரின் ‘ஸ்ரீ420’ படத்தில் கோரஸ் பாடும் பெண்ணாக நடித்தார். மேடை நாடகங்களில் நடித்து வந்தார். ஒரு பத்திரிகையில் வெளியான இவரது போட்டோவைப் பார்த்த தயாரிப்பாளர் சாஷதார் முகர்ஜி தனது படக்குழுவில் சேர்த்து துணை நடிகையாக நடிக்க வைத்தார்.

1960–ம் ஆண்டு வெளியான ‘லவ்–இன்–சிம்லா’ படத்தில் சாதனாவின் தலை அலங்காரம் அப்போது பிரபலம் ஆனது. படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார், திலீப் குமார், மனோஜ் குமார், சுனில் தத் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

பின்னர் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறி பல வெற்றிப் படங்களை தந்தார். தைராய்டு பிரச்சனையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார்.

அதன்பிறகும் அவர் நடித்த ‘இந்தா குவாம்’, ‘ஏக் பூல் தோ மாலி’, ‘கீதா மேரா நாம்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படங்கள் சாதனா இயக்கத்தில் வெளியானவை. சாதனா தனது முதலாவது வெற்றிப் படமான ‘லவ்–இன்– சிம்லா’வை இயக்கிய ராம் கிருஷ்ண நய்யாரை காதலித்தார்.

இதற்கு சாதனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி அவரையே திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

1995–ல் ஆஸ்துமா கோளாறால் கணவர் இறந்தார். திரை உலகில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் பாடகி ஆஷா போஸ்லேயின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.

நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் ரன்பீர் கபூரின் டி.வி. நிகழ்ச்சியில் தோன்றினார். அதன் பிறகு உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries