தந்தை மரணத்தால் திருமணம் பற்றிய சிந்தனையே இல்லை: பாவனா

Bhavanaகேரளாவை சேர்ந்த பாவனா ‘நம்மாள்’ படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார். பின்னர் ‘சித்திரம் பேசுதடி’ மூலம் தமிழுக்கு வந்தார்.

இதையடுத்து ‘வெயில்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’, ‘தீபாவளி’, ‘ஜெயங்கொண்டான், ‘அகல்’ ஆகிய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பெயர் வாங்கினார். என்றாலும் தொடர்ந்து தமிழ்பட வாய்ப்பு வராததால் மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

பாவனாவின் தந்தை பெயர் பாலச்சந்திரன், மலையாள பட உலகில் உதவி கேமராமேன் ஆக இருந்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் திடீர் என்று மரணம் அடைந்தார். இதனால் பாவனா சோகத்தில் மூழ்கியுள்ளார்.

இது பற்றி கூறிய அவர், ‘என் தந்தை நினைவுகளை மறக்க முடியவில்லை. அவர் இன்னும் எனக்காக வீட்டில் காத்திருப்பது போலவே தோன்றுகிறது.

மலையாளத்தில் நான் நடித்து வரும் ‘ஹலோ நமஸ்தே’ படக்குழுவினர் என் மீது மிகவும் அன்பு காட்டுகின்றனர். எனக்காக படப்பிடிப்பை 2 வாரம் தள்ளி வைத்தனர். தொடர்ந்து என்னை உற்சாக மூட்டி வருகிறார்கள்.

சிறிய வயதில் நான் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கடவுள் அருளால் அது நடந்தது. பெற்றோர் எனது திருமணத்தை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

தந்தை மறைவால் எனது திருமணம் பற்றிய சிந்தனையே இல்லாமல் போய் விட்டது. நானே எனது குடும்பத்தாரோ இப்போது திருமணம் பற்றி சிந்திக்கும் மனநிலையில் இல்லை’ என்றார் வேதனையுடன்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries