சூர்யாவுக்கு 24; பிரஷாந்துக்கு 26

PRASACUTOUT)_0_0பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாஹசம்’ படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. ஆடல், பாடல், ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக ஆஸ்திரேலிய அழகி அமண்டா நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து பிரஷாந்த் இந்தியில் அக்ஷய்குமார்-காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளிலும் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கு ‘26’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

பிரஷாந்துடன் இந்த படத்தில் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், நாசர், தம்பி ராமையா, அபி சரவணன், ரோபோ சங்கர், ஜெய் ஆனந்த், பெசன்ட்நகர் ரவி, தேவதர்ஷினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளார்கள்.

கவுரவ வேடத்தில் தேவயானி மற்றும் சிம்ரனும் நடிக்கவிருக்கிறார்கள். மேலும் முன்னணி கதாநாயகி ஒருவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். அதுபற்றிய தகவலை ரகசியமாக வைத்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் நடைபெறவிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல் ஒன்றுக்கு பிரபல பாலிவுட் நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிரஷாந்துடன் இணைந்து நடனமாடவுள்ளார்.

திரைக்கதை, வசனம் எழுதி மிகுந்த பொருட்செலவில் நடிகர் தியாகராஜன் தயாரிக்கிறார். ஆனால், யார் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளிவரவில்லை. விரைவில் தொடங்கவுள்ள இப்படம், ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries