தனுஷுடன் இணையும் ஜீவா, விஜய்சேதுபதி?

dhanush-jeeva-vijaysethupathiதனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் பரவி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளார். ‘தங்கமகன்’ படத்திற்கு பிறகு தனுஷ்-சமந்தா ஜோடி சேரும் இரண்டாவது படம் இது.

இப்படம் முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்தி உருவாகவிருக்கிறது. தற்போது நிறைய கதாநாயகர்கள் ஒரு படத்தில் இணைந்து நடிப்பது பிரபலமாகி வரும் நிலையில், இந்த படத்திலும் சில பிரபல கதாநாயகர்களை சேர்த்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஜீவா மற்றும் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதியும், ஜீவாவும் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் அவர்களையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது படத்திற்கு கூடுதல் பலமாகவும் இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online