சிம்பு தலைமறைவாக இல்லை: வழக்கறிஞர் தியாகேஸ்வரன் தகவல்

simbu-beep-song-2சிம்பு பாடி அனிருத் இசை அமைத்ததாக கூறப்படும் ‘‘பீப்’’ பாடல் இணையத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பீப் பாடல் பெண்களை மிகவும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கோவை, சென்னை உள்பட பல ஊர்களில் சிம்பு, அனிருத் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதோடு அவர்களை கைது செய்யக் கோரி போராட்டங்களும் நடந்தன.

இந்நிலையில் சிம்புவை கைது செய்ய போலீஸ் தீவிரமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிம்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறும்போது, ‘சிம்பு தலைமறைவாக இல்லை. இதுவரை சிம்புவை தேடியோ, கைது செய்யும் நடவடிக்கையிலோ இதுவரை யாரும் வரவில்லை. பீப் பாடலை யூடியூபில் வெளியிட்டவர் மீது முறையாக வழக்குகள் பதியவில்லை’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries