நடிகர் சங்கம் சார்பாக ராதிகாவிற்கு நோட்டீஸ்: விஷால்

16-1442398125-radhika-vishal456சிம்பு பாடிய பீப் சாங் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலுக்கு பல சங்கங்கள், அமைப்புகள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராதிகா சிம்பு பாடலுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மேலும் சிம்பு பிரச்சனையில் நடிகர் சங்கம் தலையிடவில்லை என்றும் ஏமாற்றி விட்டது என்றும் கூறியிருந்தார்.

இதற்கு நடிகர் சங்க செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு பதிலளித்த விஷால், ‘நாங்கள் சிம்பு குடுபத்தினருடன் பேசினோம். அவர்கள் இப்பிரச்சினையை சட்டப்படி சந்திப்பதாக தெரிவித்தனர்.

தனிப்பட்ட முறையில் சிம்புவிடம் நான் பேசினேன். நடிகர் சங்கம் சார்பாக இந்த பிரச்சனையில் தலையிட்டு எங்களால் முடித்த அளவிற்கு சமாதானம் செய்ய முயற்சித்தோம். ஆனால் முறையாக அவர்கள் பதலளிக்கவில்லை.

நாங்கள் இந்த பிரச்சனையில் தலையிட வில்லை என்றும் ஏமாற்றி விட்டது என்றும் ராதிகா கூறியது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளோம். கண்டிப்பாக ராதிகா இதற்கு பதலளிக்க வேண்டும்’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries