மீண்டும் கபாலி படப்பிடிப்பில் ரஜினி

maxresdefaultரஜினியின் ‘கபாலி’ படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தது. ரசிகர்களின் அமோக வரவேற்புக்கு இடையே இயக்குனர் ரஞ்சித் இந்த படத்துக்கான காட்சிகளை படமாக்கின்றனர்.

ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு படப்பிடிப்பு நடந்தது. ரஜினி தற்போதைய தோற்றத்தில் வெள்ளை தாடியுடன் இதில் நடித்தார். ரஜினி மற்றும் அவரது மகளாக நடிக்கும் தன்ஷிகா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினி தொடர்பான பெரும்பாலான காட்சிகள் மலேசியாவின் முக்கிய பகுதிகளில் நடந்தது.

அடுத்து, கோவாவில் கபாலி படப்பிடிப்பு நடந்தது. இதில் ரஜினி அவரது ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே ஆகியோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்கிடையே ரஜினி அமெரிக்கா சென்றார். எந்திரன் 2–ம் பாகமாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘2.0’ படத்துக்கான மேக்கப் டெஸ்ட் அங்கு நடந்தது.

அதன் பிறகு சென்னை வந்த ரஜினி ‘2.0’ பட தொடக்க விழாவில் பங்கேற்றார். எமிஜாக்சன், இந்தி நடிகர் அக்ஷயகுமார், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘2.0’ படப்பிடிப்பில் இளமை தோற்றத்தில் ரஜினி நடித்தார். எமிஜாக்சன் உள்பட பல நடிகர்கள் பங்கேற்ற காட்சிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னையில் படமாக்கப்பட்டது. ஷங்கரின் இயக்கத்தில் சில தினங்கள் படப்பிடிப்பு நடந்தன. ரஜினி இடம் பெறாத மற்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்த இடைவெளியில் ‘கபாலி’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அடுத்து மலேசியா, கோவாவில் படமானது. இப்போது எஞ்சிய காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதில் இளம் ரஜினி வேடத்தில் ரஜினி நடிக்கிறார். அது தொடர்பான காட்சிகள் படமாகும் என்று கூறப்படுகிறது.

விரைவில் ‘கபாலி’ படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று தெரிகிறது. கோடை விடுமுறையில் ‘கபாலி’ தரைக்கு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries