ஜி.வி.பிரகாஷ் படத்தில் ரஜினி வசனம்-எம்ஜிஆர் பாடல்

gvprakashஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கிய படம் ‘டார்லிங்’. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்திற்கு பாட்ஷா படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான வசனமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற வசனத்தை தலைப்பாக வைத்திருக்கின்றனர்.

ரஜினி வசனத்தை கைப்பற்றிய ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக எம்.ஜி.ஆர் படத்தின் பாடலை கைப்பற்றியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘நினைத்தை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்…’ என்ற பாடலை ரீமேக் செய்யவுள்ளனர். இப்படத்தில் அறிமுகப் பாடலாக இடம் பெறும் இப்பாடலை தற்போது உள்ள ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இசையமைக்க இருக்கிறார்கள்.

மேலும் நா.முத்துக்குமார் இக்கால இளைஞர்களுக்கு ஏற்றாற்போல் வரிகளை அமைக்க, பாபா ஷங்கர் நடனம் அமைக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries