கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பது பற்றி மவுனம் சாதிக்கும் பிரியங்கா சோப்ரா

priyanka-chopra_660_042313054728_020614072843பிரபல குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா விண்வெளி பயணத்தின்போது விபத்தில் பலியான கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாரிக்கப்படவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.

அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘குவான்ட்டிகோ’வில் தோன்றி அங்கும் பிரியங்கா சோப்ரா பிரபலமாகி வருகிறார்.

இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, உலகம் முழுவதும் இந்த தொடர்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாரிக்கப்படவுள்ள படத்தில் நடிப்பதுபற்றி இன்னும் வெளிப்படையாக எதுவும் அறிவிக்காமல் உள்ளார்.

இதுதொடர்பாக, நிருபர்களின் கேள்விக்கும் மழுப்பலாகவே பதில் அளித்துள்ள அவர், தற்போது சிறந்த கதையம்சங்களுடன் கூடிய நிறைய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

இவற்றில் பலவற்றை தேர்வு செய்யும் எண்ணம் எனக்குள்ள போதிலும், அவை எல்லாவற்றிலும் நடிப்பதற்கான நேரம் என்னிடம் இல்லை.

தற்போது கைவசம் ஆறு படங்கள் உள்ளன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமாக பறந்துகொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள படங்களில் எதில் முதலில் நடிப்பது என்பதை தீர்மானிக்கவே சிரமமாக உள்ளது என பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, 1997-ம் ஆண்டு முதன்முதலாக விண்வெளிக்கு சென்றார்.

அமெரிக்க விண்வெளி ஓடமான கொலம்பியாவில் விண்வெளிக்கு சென்று ஆய்வுகளை செய்துவிட்டு திரும்புகையில் கடந்த 2003-ம் ஆண்டு ஏற்பட்ட கோர விபத்தில் கல்பனா சாவ்லா உள்பட ஏழுபேர் பலியானது நினைவிருக்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries