தர்மதுரை ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையா? – சீனு ராமசாமி விளக்கம்

ar6876Seenu Ramasamyசீனுராமசாமி-விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தர்மதுரை’. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இப்படப்பிடிப்பு தளத்துக்கு சமீபத்தில் திடீர் விசிட் அடித்த வைரமுத்து, அங்கிருந்த படக்குழுவினருடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படங்களில் படக்குழுவினர் அருகில் ஜல்லிக்கட்டு காளையும் இடம்பெற்றிருந்தது.

இதை வைத்து இப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதையாக இருக்கும் என ஊடகங்களில் செய்திகள் பரவத் தொடங்கியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படம் ஜல்லிக்கட்டு காளையை மையப்படுத்தியது கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online