சந்தானத்துக்கு முன்னணி நடிகையை ஜோடியாக்க முயற்சி

CM_SANTHANAM_2_2433181f‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் காமெடி நடிகர் சந்தானம். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படமும் பெரிய வெற்றியைப் பெறவே, தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கும் முயற்சியில் சந்தானம் களமிறங்கியுள்ளார்.

அதன்படி, இவரை சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்திய ராம்பாலா இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் பால்கி இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம். இதற்காக முன்னணி நடிகைகள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செல்வகுமார் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சந்தோஷ் நாராயணன் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் ‘கபாலி’ படத்திற்கும், விஜய்யின் 60-வது படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online